10 மாதங்களுக்குப் பின் இன்று பள்ளிகள் திறப்பு

சாத்தூர், ஜன.19:  கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் இன்று 10 மற்றும் 12ம் மாணவர்களுக்காக இன்று திறக்கப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த 10 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. பள்ளி கல்வித்துறை உத்தரவின்படி. தமிழகத்தில் உள்ள அனைத்து மேல்நிலை பள்ளிகளில் உள்ள 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு இன்று திறக்கப்பட்டுகிறது. இதற்காக சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகள் நேற்று கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில்,` பள்ளிகளுக்கு வரும் மாணவ,மாணவியர்கள் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை கருவி மூலம் வெப்பத்தை பரிசோதனை செய்து, கையை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்து .பின்பே வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள். ஒரு வகுப்பறைக்கு 20 பேர் மட்டும் அமர வைத்து பாடங்களை நடத்த ஏற்பாடு செய்யபட்டு வருகிறது’ என்றனர்.

Related Stories:

>