உத்தமபாளையம் அருகே சரக்கு வேன் கவிழ்ந்து 25 பெண்கள் படுகாயம்

உத்தமபாளையம், ஜன. 19: உத்தமபாளையம் அருகே, சரக்கு வேன் கவிழ்ந்ததில், நெல் நடவுக்கு சென்ற 25 பெண்கள் படுகாயமடைந்தனர். உத்தமபாளையம் அருகே, ராமசாமிநாயக்கன்பட்டியில் உள்ள ஆர்.சி. வடக்கு தெருவைச் சேர்ந்த 30 பெண்கள் நெல் நடவு பணிக்காக சரக்கு ஏற்றும் வேனில் சென்றனர். செல்வம் என்பவர் ஓட்டினார். ராமசாமிநாயக்கன்பட்டி தாமரைக்குளம் பகுதியில் வந்தபோது, திடீரென சரக்கு வேன் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் இருந்த புஷ்பம் (48), ஜோசப்மேரி (46), சலேத்மேரி (60), மரியம்மாள் (55), அந்தோணியம்மாள் (58), ராதா, கதிரியம்மாள், லூர்துமேரி, ஜென்ஸி உட்பட 25 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4 பேர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>