மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பெரியகுளம், ஜன. 19: தேனி மாவட்டம், பெரியகுளத்தில் வேளாளர் எனற பெயரை மாற்று சமுதாயத்தினருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் வேளாளர் சமூக மக்கள் ஆர்பாட்டம் நடத்தினனர். ஆர்பட்டத்தில், ‘தமிழக அரசு வேளாளர் பெயரை மாற்று சமுகத்தினருக்கு வழங்கினால் வரும் தேர்தலை புறக்கணிப்போம். தங்கள் வாக்காளர் அடையாள அட்டை, ரேசன் கார்டு, ஆதார் உள்ளிட்ட அட்டைகளை அரசிடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரியகுளம் பகுதியில் இருந்து 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் ஆர்ப்பாட்டத்திற்கு முன்பாக பெரியகுளம், வடுகபட்டி, சில்வார்பட்டி, தேவதனாப்பட்டி உள்ளிட்ட ஊர்களில் வேளாளர் பெயரை வழங்க பரிந்துரை செய்த தமிழக அரசிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வேளாளர் சமுதாயத்தினர் வீடுகளில் கருப்பு கொடிகளை கட்டி எதிர்ப்பை தெரிவித்தனர்.

Related Stories:

>