அடிப்படை வசதி செய்துதரக்கோரி ஆர்ப்பாட்டம்

ஆண்டிபட்டி, ஜன. 19: ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்ப்புலிகள் அமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி ஒன்றியத்திக்கு உட்பட்ட ரெங்கசமுத்திரம் ஊராட்சி நரசிங்கபுரம் கிராமம், மீனாட்சிபுரம் ஊராட்சி தேக்கம்பட்டி கிராமம் மற்றும் அனுப்பப்பட்டி ஊராட்சி மேக்கிழார்பட்டி கிராமம் ஆகிய கிராமங்களில் போதிய அடிப்படை வசதியின்றி பொதுமக்கள் அவதிப்படுவதாக கூறப்படுகிறது. இது குறித்து ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனைக்கண்டித்து நேற்று ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு தமிழ்புலிகள் அமைப்பினர் மற்றும் கிராம மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ் புலிகள் அமைப்பின் ஒன்றியச் செயலாளர் பழனி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பகத்சிங் முன்னிலை வகித்தார். இதில் கிராமத்தில் பெண்களுக்கு கழிப்பிடம், கழிவுநீர் வாறுகால், சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து தர வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். பின்னர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணனிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.

Related Stories:

>