பெரியகுளத்தில் அதிமுக எம்பி அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி இளைஞர் பெருமன்ற நிர்வாகிகள் கைது

பெரியகுளம், ஜன. 19: பெரியகுளத்தில் அதிமுக எம்பி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம், பெரியகுளத்தில் அதிமுக எம்பி ரவீந்திரநாத்தின் அலுவலகம் உள்ளது. இந்நிலையில், புதிய வேளாண் சட்டங்களுக்கு எம்பி ஆதரவு தெரிவித்து வருவதால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெரியகுளத்தில் பழைய பேருந்து நிலையத்திலிருந்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் 30க்கும் மேற்பட்டோர் எம்பி அலுவலகத்தை முற்றுகையிட தேனி-திண்டுக்கல் ரோட்டில் பேரணியாக சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அப்போது எம்பி ரவீந்திரநாத், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை எதிர்த்து கோஷம் எழுப்பினர். இச்சம்பவத்தால் தேனி-திண்டுக்கல் ரோட்டில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories:

>