×

குறைந்த மின்அழுத்தத்தால் மின் சாதனங்கள் பழுது சிப்காட் மக்கள் புலம்பல்

மானாமதுரை, ஜன.19: மானாமதுரை சிப்காட் பகுதியில் குறைந்த மின்அழுத்தம் காரணமாக மின்சாதனங்கள பழுதாவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மானாமதுரை தாலுகா அலுவலகம் அருகே எம்ஜிஆர் நகர், ராஜேந்திரன் நகர், கங்கையம்மன் நகர் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும், தாலுகா அலுவலகம், சிப்காட் திட்ட அலுவலகம், காவல்நிலையம் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. கடந்த இரண்டு வார ங்களுக்கு மேலாக இப்பகுதியில் குறைந்த மின் அழுத்தம் ஏற்படுவதால் மின்விசிறி, அயர்ன்பாக்ஸ், மிக்சி, கிரைண்டர், நீர்மூழ்கி மோட்டார் உள்ளிட்ட மின்சாதனங்களை இயக்க முடியவில்லை. குறைந்த மின் அழுத்தத்தால் மின்சாதனங்கள் அடிக்கடி பழுதாவதால் அவற்றை இயக்க முடியாமல் மக்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

இது குறித்து பெரியசாமி கூறுகையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு மே லாக இங்குள்ள டிரான்ஸ்பார்மர் பழுதாகிவிட்டது. இது குறித்து மின்வாரியத்திடம் தெரிவித்தோம். தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள பழைய டிரான்ஸ்பார்மரை எடுத்துவிட்டு கடந்த 11ம் தேதி வேறு ஒன்றினை பொருத்தினார்கள். அன்று இரவே அதுவும் பழுதாகிவிட்டது. அதனையும் மின்வாரியத்தினர் திரும்பவும் கழற்றி எடுத்துசென்றனர். அதன்பின் கடந்த ஒருவாரமாக புதியதை பொருத்தவில்லை. இதனால் பகல் நேரங்களில் வாஷிங்மெஷின், பிரிட்ஜ், அயர்ன்பாக்ஸ், நீர்மூழ்கிமோட்டார் ஆகியவற்றை இயக்கமுடியவில்லை. எனவே எங்கள் பகுதிக்கு புதிய டிரான்ஸ்பார்மரை பொருத்த மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : Chipkot ,
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே பரபரப்பு...