×

காரைக்குடியில் இன்று திமுக சார்பில் சாலையில் உருளும் போராட்டம்

காரைக்குடி, ஜன.19: காரைக்குடியில் பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் தென்னவன் தலைமையில் திமுக சார்பில் இன்று சாலையில் உருளும் போராட்டம் நடைபெற உள்ளது. காரைக்குடியில் நகர் திமுக ஆலோசனை கூட்டம் நடந்தது. நகர செயலாளர் குணசேகரன் வரவேற்றார். முன்னாள் எம்எல்ஏ சுபதுரைராஜ், முன்னாள் நகர்மன்ற தலைவர் முத்துத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர் தென்னவன் தலைமை வகித்து பேசுகையில், அதிமுக ஆட்சியின் அவலத்துக்கு காரைக்குடியில் உள்ள சாலைகளே சாட்சி. பாதாளசாக்கடை திட்டத்தால் மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். சாலைகள் முழுவதும் குண்டும், குழியுமாக பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இருப்பினும் இந்த அரசு அதனை விரைந்து முடிக்காமல் இழுத்தடித்து வருகிறது.

மக்களின் துயர்துடைக்க தமிழகத்தை மீட்க தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக வருவார். திமுக ஆட்சி அமைவது நிச்சயம். திமுக ஆட்சி அமைய அனைவரும் அயராது பாடுபட வேண்டும் என்றார். கூட்டத்தில் பாதாள சாக்கடை திட்டத்தால் மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வரும் நிலையில் முன்னாள் அமைச்சர் தென்னவன் தலைமையில் இன்று காலை 9 மணிக்கு ஐந்துவிளக்கு பகுதியில் சாலையில் உருளும் போராட்டம் நடத்துவது. சட்டமன்ற தேர்தலில் ஆற்றவேண்டிய பணிகள் மற்றும் உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நகர துணை செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.

Tags : DMK ,road ,Karaikudi ,
× RELATED மனைவியை எரித்துக்கொன்று தொழிலாளி தற்கொலை: காப்பாற்ற சென்ற மகனும் பலி