கமுதி அருகே சேதமான பயிர்களை எம்எல்ஏ ஆய்வு

கமுதி, ஜன.19: கமுதி அருகே தொடர் மழையால் வீணாகிய நெற்பயிர்களை எம்எல்ஏ ஆய்வு செய்தார். கமுதி அருகே கீழக்கொடுமலூர் கிராமத்தில் சுமார் 800 ஏக்கருக்கு மேல் நெல்விவசாயம் செய்யப் பட்டுள்ளது. தற்போது பெய்த தொடர் மழையால் வயல்வெளிகளில் மழைநீர் தேங்கி நெல் விவசாயம் முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியன் இப்பகுதி விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் வயல்வெளிகளில் நடந்து சென்று மழையால் வீணாகிய நெற்பயிர்களை ஆய்வு செய்தார். பாதிப்படைந்த விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். மேலும் கலெக்டரிடம் இப்பகுதியின் நிலைமை குறித்து விரிவாக எடுத்துரைக்க உள்ளதாக கூறினார். இதுபோல் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாய சேதங்கள் குறித்து ஆய்வு நடத்தி வருவதாக  கூறினார். ஆய்வின்போது கமுதி வட்டார காங்கிரஸ் தலைவர் கோவிந்தன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Related Stories: