டூவீலர் கவிழ்ந்து ஒருவர் பலி

ஆர்.எஸ்.மங்கலம், ஜன.19: திருப்பாலைக்குடியில் டூவீலர் கவிழ்ந்து ஒருவர் உயிரிழந்தார். ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் பகுதியை சேர்ந்தவர் குப்புச்சாமி(42). இவர்  ராமநாதபுரம் சென்று விட்டு கிழக்கு கடற்கரை சாலை வழியாக டூவீலரில் ஊர் திரும்பி கொண்டிருந்தார்.  திருப்பாலைக்குடி காவலர் குடியிருப்பு அருகே சென்றபோது திடீரென டூவீலர் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் கீழ் இறங்கி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த குப்புச்சாமி சம்பவ இடத்திலே பலியானார். இது குறித்து திருப்பாலைக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>