- செந்தில்பாஜி
- கருர்-ஈரோடு
- ரூ
- வேலாயுதம்பாளையம்
- கரூர்
- ஈரோடு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கரூர் - ஈரோடு சாலை
- கரூர்,
வேலாயுதம்பாளையம், டிச. 16: தமிழகத்தில் கரூர் மற்றும் ஈரோடு டெக்ஸ்டைல் தொழில் முன்னணி நகரங்கள் ஆகும். எனவே கரூர், ஈரோடு மாவட்டங்கள், தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கரூர்-ஈரோடு சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்து தருமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதன் அடிப்படையில் தமிழக அரசு நிதி ஒதுக்கி பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கரூர் உட்கோட்டத்தின் மூலம் ஈரோடு – கரூர் சாலையில் அசாரிப்பட்டறை மற்றும் புன்னம் சத்திரம் முதல் குட்டக்கடை வரை முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.27 கோடி மதிப்பீட்டில் சாலை மற்றும் பாலம் அகலப்படுத்தும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. சாலை அகலப்படுத்தும் பணியினை திருப்பூர் கண்காணிப்பு பொறியாளர் விஸ்வநாதன், கரூர் கோட்ட பொறியாளர் ரவிக்குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் போது, சாலையானது அரசு நிர்ணயித்துள்ள அளவிற்கு அகலப்படுத்த படுகிறதா? அதேபோல் சரியான நிர்ணயித்து அளவில்ஆழப்படுத்தி முறையாக ஜல்லிகள் நிரப்பி மற்றும் தார் சாலை அமைக்கப்படுகிறதா? என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் போது உதவி கோட்ட பொறியாளர் தமிழ்செல்வன், உதவிபொறியாளர் பார்த்தசாரதி ஆகியோர் உடனிருந்தனர்.
