சோழவந்தானில் ரூ.25லட்சத்தில் புதிய பாலம்

சோழவந்தான், ஜன.19:  சோழவந்தான் அருகே கொடிமங்கலம் ஊராட்சி தாராப்பட்டியில் நிலையூர் கால்வாய் மேல் செல்லும் சுமார் 70 வருட பழமையான பாலம் பழுதடைந்திருந்தது. புதிய பாலம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதையடுத்து  இத்தொகுதியின் எம்.எல்.ஏவும், அமைச்சருமான செல்லூர் ராஜூவின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 லட்சம் ஒதுக்கப்பட்டு, பூமி பூஜை நேற்று நடைபெற்றது. கலெக்டர் அன்பழகன் தலைமை வகித்தார். ஊராட்சித் தலைவர் உமாதேவி திருக்குமரன், துணைத் தலைவர் ஜெயலெட்சுமி கவிமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு சங்க தலைவர் முத்தையா வரவேற்றார்.  அமைச்சர் செல்லூர் ராஜூ பூமி பூஜைகள் செய்து பணிகளை துவக்கி வைத்தார்.

Related Stories:

>