×

குற்றங்கள் குறையவில்லை நகரில் கடந்தாண்டில் 40 கொலை விபத்தில் 81 பேர் பலி

மதுரை, ஜன.19:  மதுரை நகரில் கடந்தாண்டு 40 கொலைகள் நடந்துள்ளது. 2019ல் 44 ஆக இருந்தது. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கு 2019-ல் 61 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. ஆனால் 2020-ல் அது 52 வழக்குகளாக குறைந்துள்ளது. திருட்டு வழக்குகளாக 2020-ம் ஆண்டு 30 நகை பறிப்பு, 6 செல்போன் பறிப்பு வழக்கு மற்றும் 3 கொள்ளை முயற்சி உள்ளிட்ட மொத்தம் 98 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சாலை விபத்துகளில் 2020-ம் ஆண்டு  81 நபர்கள் இறந்துள்ளனர். இது 2019-ம் ஆண்டு 185 ஆக இருந்தது. இதனால் 2019-ம் ஆண்டை காட்டிலும் கடந்தாண்டு விபத்து குறைந்துள்ளது. கஞ்சா வழக்குகளை பொறுத்த வரையில் போலீசாரின் தீவிர நடவடிக்கை காரணமாக கடந்தாண்டு 345 வழக்குகள் பதிவு செய்து, 1,117 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு மட்டும் 17 கஞ்சா வியாபாரிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags : homicides ,city ,
× RELATED சென்னை கண்ணகி நகரில் போலீசார் மீது கஞ்சா போதை ஆசாமிகள் தாக்குதல்