×

சப்பர முகூர்த்த விழா

அலங்காநல்லூர், ஜன.19:  அழகர்கோவிலில் இந்த ஆண்டு சித்திரை திருவிழாவில் வரும் ஏப். 26ம் தேதி எதிர் சேவையும், 27ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வும் நடைபெற உள்ளது. விழாவின் முக்கி நிகழ்ச்சியான சப்பர முகூர்த்தம் உற்சவம் நேற்று முன்தினம் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோவில் நடைபெற்றது. இந்த வைபவத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மற்றும் கூடல் அழகர் கோவிலில் இருந்து சிவாச்சாரியார்கள் மற்றும் பட்டாச்சாரியார்கள் கலந்துகொண்டு சித்திரை திருவிழாவை சிறப்பாக நடத்துவது என கலந்தாலோசனை செய்தனர். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக சித்திரை திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கு அரசு உரிய அனுமதி கொடுத்து நடத்தியுள்ளதால், சித்திரை திருவிழாவும் நடைபெறும் என பக்தர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Tags : ceremony ,Sapbara Mukurtha ,
× RELATED இந்து,முஸ்லிம்கள் இணைந்து நடத்திய பொன் ஏர் விடும் விழா