×

இலங்கைக்கு அனுப்ப கோரி மின் டவரில் ஏறி அகதி போராட்டம்

திருமங்கலம், ஜன.19:  திருமங்கலத்தை அடுத்துள்ள உச்சப்பட்டி இலங்கை அகதிகள் முகாமினை சேர்ந்தவர் தங்கவேலு(51). கடந்த 2018ல் ஏற்பட்ட தகராறில் இவர் மீது போலீஸ் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தங்கவேலு, தான் இலங்கைக்கு செல்ல விரும்புவதாக 6 மாதத்திற்கு முன்பு இவர் விருப்பமனு கொடுத்துள்ளார். வழக்கு இருப்பதால் வழக்கினை முடித்த பின்பு தான் இவரை இலங்கைக்கு அனுப்ப முடியும் என அதிகாரிகள் மறுத்துள்ளனர். இதன் காரணமாக இவரது பதிவு நீக்கம் செய்யப்பட்டது. இதனால் தங்கவேலுவால் இலங்கைக்கு செல்ல இயலவில்லை. பதிவு நீக்கம் செய்யப்பட்டதால் இவருக்கு அரசு அதிகாரிகள் மீது கோபம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமாக மது அருந்திய தங்கவேலு முகாமில் இவரது வீட்டின் அருகேயிருந்த உயரழுத்த மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.  தகவல் அறிந்த ஆஸ்டின்பட்டி போலீசார், கியூ பிரிவு போலீசார், வருவாய்த் துறையினர் போராட்டம் நடத்திய தங்கவேலுவிடம் நீண்டநேரம் பேச்சுவார்த்தை நடத்தி அவரை கீழே இறங்கினர். சம்பவம் குறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கைக்கு அனுப்ப வலியுறுத்தி அகதி டவரில் ஏறி போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : power tower ,Sri Lanka ,
× RELATED இலங்கையில் கார் பந்தயத்தின் போது...