மேலூர் அருகே ஆபத்தான குடியிருப்புகள்

மேலூர், ஜன.19:  மேலூர் அருகே ஆதிதிராவிடர் குடியிருப்பு சேதமாகி உள்ளதால் குடியிருப்பு வாசிகள் அச்சத்தில் உள்ளனர். மேலூர் அருகே கண்மாய்பட்டியில் 30 வருடங்களுக்கு முன்பு ஆதிதிராவிட காலனி பகுதியில் அரசால் தொகுப்பு வீடுகள் கட்டிதரப்பட்டன. அவை சேதமடைந்து மேற்கூரைகள் சிமெண்ட் சிலாப்புகள் பெயர்ந்து அடிக்கடி கீழே விழுவது தொடர்கதையாக உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.  இது மழைகாலம் என்பதால் விஷஜந்துகளும் படையெடுப்பதால் குழந்தைகளுடன் வசிக்க அச்சம் ஏற்படுதாக வேதனை தெரிவிக்கின்றனர். தங்களின் வீடுகளுக்கு மராமத்து செய்து, அடிப்படை வசதிகளையும் மேற்கொள்ள அரசு அதிகாரிகள் செய்ய வேண்டுமென அப்பகுதி குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>