×

குழந்தைகள் நூலகம் திறப்பு

வத்தலகுண்டு, ஜன. 19: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே முசுவனூத்தில், சைல்டு வாய்ஸ் நிறுவனம் சார்பில் இந்திய புத்துயிர்ப்பு இயக்க திட்ட உதவியுடன் கிராமப்புறங்களில் கல்வி பயிலும் விளிம்புநிலை மக்களின் குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தவும், வாசிப்பு திறனை அதிகப்படுத்தவும், குழந்தைகள் நேய பஞ்சாயத்து நூலகம் தொடங்கப்பட்டது. துவக்க விழாவுக்கு ஊராட்சி தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை வகித்தார்.
   பஞ்சாயத்து துணை தலைவர் பிரபா தேவி முன்னிலை வகித்தார். இந்திய புத்துயிர்ப்பு திட்ட இயக்கத்தின் இணை செயலாளர் கிருஷ்ணசாமி குத்துவிளக்கு ஏற்றி நூலகத்தை தொடக்கி வைத்து  சிறப்புரையாற்றினார். சைல்டு வாய்ஸ் தொண்டு நிறுவன அறங்காவலர் அண்ணாதுரை வாழ்த்திப் பேசினார். சைல்டு வாய்ஸ் திட்ட மேலாளர் விக்னேஷ் தொகுத்து வழங்கினார். இதில் முசுவனூத்து ஊராட்சி செயலர், வார்டு உறுப்பினர்கள், சைல்டு வாய்ஸ் நிறுவன பணியாளர்கள் கலந்து கொண்டனர். சமுதாய வளமைய குழந்தைகள், வளர் இளம் பருவத்தினர் கலைநிகழ்ச்சிகள் நடத்தினர்.

Tags : Opening ,children ,library ,
× RELATED முசிறி கிளை நூலகத்தில் குழந்தைகளுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி