திண்டுக்கல்லில் சாலை பாதுகாப்பு மாதம் போலீசார் விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வழங்கினர்

திண்டுக்கல், ஜன. 19: திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முதல் சாலை பாதுகாப்பு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி வாகன ஓட்டிகளுக்கு போலீசார் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர். தமிழகத்தில் ஆண்டுதோறும் சாலை பாதுகாப்பு வாரம் கடைப்பிடிக்கப்படும். இந்தாண்டு நேற்று முதல் பிப்.17 வரை சாலை பாதுகாப்பு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் தொடக்க விழா திண்டுக்கல் அரசு மருத்துவமனை எதிரே நடந்தது. நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் கணேசன், வட்டார போக்குவரத்து அலுவலர் சுரேஷ், டிஎஸ்பி மணிமாறன் தலைமை வகித்தனர். இதில் ஓட்டுனர்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலை விதிகளை கடைப்பிடிப்பதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்தவர்களுக்கு ரோஜாப்பூ கொடுத்தனர். தொடர்ந்து கல்லூரி மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ்களை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்துதுறை அலுவலர்கள் மற்றும் வட்டார போக்குவரத்துதுறை சேர்ந்த ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் வாகனங்களுக்கு விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.

Related Stories:

>