முக்கூடல், கடையத்தில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா

பாப்பாகுடி, ஜன. 19: முக்கூடல், கடையத்தில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 104வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.இதையொட்டி முக்கூடல் தங்கம்மன் கோயிலில் நகர அதிமுக சார்பில் நடந்த எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவுக்குத் தலைமை வகித்த தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளர்  செல்வமோகன் தாஸ் பாண்டியன் எம்எல்ஏ தலைமையில் 1000 பேருக்கு சர்க்கரை பொங்கல்  வழங்கினார். மாவட்ட அவைத்தலைவர் சண்முகசுந்தரம், எம்ஜிஆர் மன்ற மாவட்டச் செயலாளர் காத்தவராயன், விவசாய அணி மாவட்டச் செயலாளர் கிருஷ்ணசாமி சிறப்புரையாற்றினர். இதில் நிர்வாகிகள், சார்பு அணியினர், தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.  ஏற்பாடுகளை அதிமுக நகர நிர்வாகிகள் வில்சன், ஜெயந்த் பீட்டர்  செய்திருந்தனர்.  கடையம்: கடையம் அருகே அதிமுக சார்பில் புங்கம்பட்டியில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர்  பிறந்த நாள் விழா நடந்தது.  

விழாவுக்குத் தலைமை வகித்த தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ, எம்ஜிஆர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் இதையொட்டி வக்கீல் பிரிவு மாவட்ட துணைச்செயலாளர் புங்கம்பட்டி ராஜசேகர் ஏற்பாட்டில் ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்கும் பணியைத் துவக்கிவைத்தார். முன்னாள் எம்எல்ஏ பி.ஜி. ராஜேந்திரன், முன்னாள் எம்பி பிரபாகரன் முன்னிலை வகித்தனர்.

 வக்கீல் பிரிவு மாவட்டச் செயலாளர் குமார் பாண்டியன் வரவேற்றார். கடையம் ஒன்றியச் செயலாளர்கள் அருவேல்ராஜ், முருகேசன் வாழ்த்திப் பேசினர். இதில் மாவட்ட அவைத்தலைவர் சண்முகசுந்தரம், ஒன்றிய அவைத்தலைவர் ஜெகநாதன் பாண்டியன், வக்கீல் பிரிவு மாவட்ட இணைச்செயலாளர் சாந்தகுமார், துணைச்செயலாளர் ராஜேஷ் கண்ணா, ஒன்றிய துணைச்செயலாளர்கள் தங்ககுமார், உச்சிமாகாளி, மகளிர் அணி சந்திரகலா, முன்னாள் ஒன்றியச் செயலாளர் செல்வின், குமாரவேல், பார்த்திபன், கணேசன், குணசேகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இளைஞர் பாசறை தமிழ் மணியன் நன்றி கூறினார்.

Related Stories:

>