கடையநல்லூரில் திமுக கொடியேற்று விழா

கடையநல்லூர், ஜன.19:  கடையநல்லூரில் திமுக கிளை நிர்வாகிகள் மற்றும் கலைஞர் பகுத்தறிவு பாசறை சார்பில்   பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கட்சி  கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

 தலைமை வகித்த தென்காசி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் வக்கீல் துரை, கட்சிக் கொடியேற்றி மக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் மாவடிக்கால் லிங்கம் , முன்னாள் நகர செயலாளர் முகம்மது அலி,  நெல்லை மத்திய மாவட்ட துணைச்செயலாளர் கண்ணன்,  மருத்துவ அணி துணை அமைப்பாளர் டாக்டர் சஞ்சீவி, தகவல் தொழில்நுட்பஅணி மாவட்ட அமைப்பாளர் சிவக்குமார், பாசறை கவுரவ தலைவர் சுடலைமுத்து, தலைவர் முகைதீன் பிள்ளை, செயலாளர் சாகுல் ஹமீது,  துணைச் செயலாளர்மாவடி நெடுமாறன்,  மாவட்டப் பிரதிநிதிகள் அசன், சங்கர்,  மாநில பேச்சாளர் இஸ்மாயில், வர்த்தக அணி துணைச் செயலாளர் அமுதம் இஸ்மாயில், முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் ராசையா, சிறுபான்மை அணி துணைச் செயலாளர் விஸ்வா சுல்தான், நெல்லை உதயநிதி ஸ்டாலின் மன்ற தலைவர் ஈஸ்வரன், அமீரக திமுக அசன், தொழிற்சங்க துணைத்தலைவர் கணேசன், கம்பிளி மசூது,  யூசுப், அரபா வஹாப், சிந்தா, பேச்சாளர் இசக்கி, முன்னாள் திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் இலங்கேஸ்வரன்,  கிளைச் செயலாளர்  ஆப்தீன் அஸீஸ்,  அகம்மது அலி, நெல்லை உஸ்மான், ஹாஜா, மணிகண்டன், அக்பர் அலி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Related Stories:

>