×

தென்காசியில் ஜாஸ் பில்டர்ஸ் நிறுவனத்தின் ஜாஸ் கட்டுமான வடிவமைப்பு நிறுவன திறப்பு விழா

தென்காசி, ஜன. 19: தென்காசியில் ஜாஸ் பில்டர்ஸ் நிறுவனத்தின் ஜாஸ் ஆர்க் ஸ்டுடியோ கட்டுமான வடிவமைப்பு நிறுவனம் திறப்பு விழா நடந்தது.  நிகழ்ச்சிக்கு வர்த்தக சங்கங்களின் பேரவை மாநில இணைச்செயலாளரான தொழிலதிபர் வி.டி.எஸ்.ஆர். முகமது இஸ்மாயில் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக கே.ஆர். பில்டர்ஸ்  ராஜகோபாலன், பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளித் தாளாளர் ஆர்.ஜே.வி. பெல், ஜமாலியா கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர் ஜமால் முகமது அப்துல்லா பங்கேற்றனர். இதையடுத்து புதிய அலுவலகத்தை தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ திறந்துவைத்தார்.   ஜாஸ் பில்டர்ஸ் உரிமையாளர் பக்கீர் மைதீன், மீரான் மருத்துவமனை குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் டாக்டர் அப்துல் அஜீஸ், தமிழ்நாடு என்.எல்.ஓ. துணைத்தலைவர்  காங்கிரஸ் பொன் பாண்டியன், அட்வகேட் அசோசியேசன் செயலாளர் வக்கீல் புகழேந்தி, வக்கீல் முகமது இஸ்மாயில் சேட், மகாராஜா பைப் சென்டர் உரிமையாளர் எம்.எஸ். ஹாஜா முகைதீன், கே.பி.என். சாமில் உரிமையாளர் அப்துல்ரஹீம், திமுக தென்காசி நகரச் செயலாளர் சாதிர், ரூபி ஹார்டுவேர் உரிமையாளர் ஜலால், அதிமுக நகரச் செயலாளர் சுடலை, செங்கோட்டை முன்னாள் யூனியன் சேர்மன் முருகையா, வக்கீல்  ரங்கராஜ், மாரியப்பன் முன்னிலை வகித்தனர்.

 பாலாஜி கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர் பொறியாளர் முத்துக்குமார் முதல் பணியைத் துவக்கிவைக்க விடிஎஸ்ஆர் நிறுவனத்தைச் சேர்ந்த பாபு பெற்றுக்கொண்டார் தென்காசி பில்டர்ஸ் அசோசியேசன் சேர்மன் தில்லை நடராஜன், செயலாளர் மாரிமுத்து, பொருளாளர் ஆனந்த் தென்காசி சிவில் இன்ஜினியர் அசோசியேசன் தலைவர் பொறியாளர் முத்துமாரியப்பன் செயலாளர் சண்முக செல்வன் பொருளாளர் மாரியப்பன். ஆஷிக் ஹார்டுவேர் உரிமையாளர்  ஆஷிக், எஸ்பிஎம் பில்டர் முருகையா, நியூ தாஜ் டைல்ஸ் அண்ட் கிரானைட், பேஷன் டைல்ஸ் கிரானைட்ஸ், வல்ல நாட்டார் பில்டிங் மெட்டீரியல் சப்ளையர்ஸ் மற்றும் நிறுவனங்கள்,  ஹைடெக் ஹார்டுவேர் கலெக்சன்ஸ்,  எபனேசர் ஏஜென்சிஸ்,  சௌதா எலக்ட்ரிக்கல்ஸ்,  டீலக்ஸ் ஹார்டுவேர்ஸ் அண்ட் எலெக்ட்ரிக்கல்ஸ், பாரத் ஹார்டுவேர்ஸ், நியூ சவுதா எலெக்ட்ரிக்கல்ஸ், குமரன் பில்டிங் மெட்டீரியல் சப்ளையர்ஸ், ராசி ஸ்டீல் கம்பெனி, சிட்டிசன் டைல்ஸ் அண்ட் கிரானைட், சித்திக் டிரேடர்ஸ் உரிமையாளர்கள் உள்பட அரசியல் பிரமுகர்கள் அரசு அதிகாரிகள் தொழிலதிபர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பங்கேற்றனர்.  ஜாஸ் பில்டர் அண்ட் புரமோட்டர்ஸ் உரிமையாளர் சுல்தான் செய்யது இப்ராஹிம் நன்றி கூறினார்.

Tags : Tenkasi ,Jazz Builders' Jazz Construction Design Company Opening Ceremony ,
× RELATED தென்காசி மாவட்டம் மைப்பாறை அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து