குடும்ப தகராறில் வாலிபர் தீக்குளித்து சாவு

நெல்லை, ஜன. 19: தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டம் அருகே உள்ள புதுக்குடியை சேர்ந்தவர் முருகன் (29). விவசாயியான இவருக்கும், பாளை. பெருமாள்புரத்தை சேர்ந்த சங்கரி (25) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. மனவேதனையடைந்த சங்கரி, 2 வாரங்களுக்கு முன்பு தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். கடந்த 15ம் தேதி முருகன், பெருமாள்புரத்தில் உள்ள மாமனார் வீட்டிற்கு வந்தார். அங்கு மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு வலியுறுத்தினார். ஆனால் அதற்கு அவர் மறுக்கவே, மனமுடைந்த முருகன் தீக்குளித்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முருகன் இறந்தார். இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>