முக்காணி தாமிரபரணி ஆற்றில் மூழ்கி முதியவர் சாவு

ஆறுமுகநேரி,ஜன.19: முக்காணி தாமிரபரணி ஆற்றில் மூழ்கி முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். முக்காணி ரவுண்டானாஅருகில் உள்ள காந்திநகரை சேர்ந்தவர் அம்மாசி(80). இவருக்கு சரஸ்வதி(70) என்ற மனைவியும் 4மகன்கள், 2மகள்கள் உள்ளனர். அம்மாசி நேற்று மதியம் முக்காணி தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். ஆற்றில் தண்ணீர்அதிகளவில் சென்றுகொண்டிருந்ததால் ஆழமான பகுதிக்கு சென்ற அவர் திடீரென மூச்சு திணறி நீரில் முழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த ஆத்தூர் போலீசார் சம்பவஇடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து ஆத்தூர் டிஎஸ்பி (பயிற்சி) சஞ்சீவ்குமார் விசாரணை செய்து வருகிறார்.

Related Stories:

>