×

கலெக்டர் அலுவலகத்திற்கு முளைத்த மக்காசோளம் பயிருடன் வந்த விவசாயிகள்

திருச்சி, ஜன.19: மழைநீரில் மூழ்கி முளைத்த மக்காச்சோள பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்ககோரி லால்குடி பகுதியை சேர்ந்த 30க்கு மேற்பட்ட விவசாயிகள் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தனர். திருச்சி மாவட்டம், லால்குடி அருகே சரடமங்கலத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் கருகிய மற்றும் அழுகிய பயிர்கள், மழைநீரில் மூழ்கி முளைவிட்ட மக்காச்சோளம் பயிர்களை எடுத்துக்கொண்டு நேற்று திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர். அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: சரடமங்கலம் கிராமத்தில் 700 ஏக்கர் பரப்பளவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பயிரிடப்பட்ட மக்காச்சோளம் பயிர்கள் போதிய பருவ மழையில்லாத காரணத்தால் சரியான மகசூல் ஏற்படவில்லை. தற்போது பருவம் தவறி பெய்த அதிக மழையால் மக்காச்சோளம் நீரில் மூழ்கின. நீரில் மூழ்கிய ஏராளமான பயிர்கள் அழுகியும், மூழ்கிய பயிர்களிலிருந்து செடிகள் முளைவிட்டுள்ளன. விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மழையால் சேதமடைந்த பயிர்களை கணக்கிட்டு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

Tags : Office ,Collector ,
× RELATED மண்டல அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம், பயிற்சி வகுப்பு