திருச்சி க்ரைம் செய்திகள் திருவெறும்பூர் அருகே கிராம விழிப்புணர்வு காவலர் அறிமுக விழா

திருவெறும்பூர், ஜன.19: திருவெறும்பூர் அருகே உள்ள போலீஸ் காலனியில் கிராம விழிப்புணர்வு காவலர் அறிமுக விழா நேற்று நடந்தது. விழாவிற்கு திருச்சி மத்திய மண்டல டிஐஜி ஆனிவிஜயா தலைமை வைகித்து பேசியதாவது: கிராம விழிப்புணர்வு காவலர் திருச்சி சரகத்திற்கு உட்பட்ட 5 மாவட்ட தாய் கிராமம் மற்றும் குக்கிராமங்கள் தோறும் நியமிக்கப்பட்டு வருவதாகவும், அதன் ஒரு பகுதியாக தற்போது நவல்பட்டு காவல் நிலையத்திற்கு உட்பட்ட போலீஸ் காலனியில் கிராம விழிப்புணர்வு காவலராக சற்குணம் என்ற காவலரை போலீஸ்காலனி கிராம மக்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதாகவும், இந்த பகுதியில் உள்ள பிரச்சினைகள் குறித்து அவரிடம் முறையிடலாம் என்றும் அவர் அதற்குரிய நடவடிக்கை எடுப்பார் என்றும் கூறினார். மேலும் போலீஸ் காலனியில் குற்ற செயல்கள் எதுவும் நடைபெற கூடாது என்றும், அதனை தடுப்பதற்கு கிராம மக்களும் உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இந்த விழாவில் சுரேஷ்குமார், நவல்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் ஜேம்ஸ் மற்றும் திருவெறும்பூர் கோட்டத்திற்குட்பட்ட காவல் நிலையத்திற்கு உட்பட்ட இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக போலீஸ் காலனியில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு டிஐஜி ஆனி விஜயா பரிசுகளை வழங்கினார்.

Related Stories:

>