வெங்கங்குடியில் பொங்கல் திருவிழா சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு

திருச்சி, ஜன.19: 32வது சாலை பாதுகாப்பு மாதம் நாடு முழுவதும் 18.1.2021 முதல் 17.2.2021 வரை கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி மத்திய பஸ் நிலையத்தில் அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) திருச்சி மண்டல பொது மேலாளர் ராஜ்மோகன் தொடங்கி வைத்தார். பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு இனிப்பு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பஸ்களுக்கு சாலை பாதுகாப்பு வாசகம் அடங்கிய ஸ்டிக்கர்கள் பொருத்தியும், பயணிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரம் வழங்கினார். கிளை மேலாளர்கள், உதவி பொறியாளர்கள் டிரைவர், கண்டக்டர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேட்ஜ் வழங்கி பாதுகாப்புடன் பஸ் இயக்கத்தினை தொடர்ந்திட ஆலோசனை வழங்கி இனிப்பு வழங்கப்பட்டது. துணை மேலாளர்கள் சிங்காரவேலு (வணிகம்), நடராஜன் (கணக்கு), ரெங்கராஜன் (பணியாளர் சட்டம்) உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories:

>