மேம்பாலத்தில் டூவீலர் கவிழ்ந்து பெண் படுகாயம்

சேலம், ஜன.19: ஓமலூர் பகுதியில் இருந்து சேலம் நோக்கி டூவீலரில் 45 வயது மதிக்கத்தக்க பெண்ணும், 25 வயது மதிக்கத்தக்க வாலிபரும் நேற்று காலை 10.30 மணியளவில் சேலம் நோக்கி வந்துகொண்டிருந்தனர். கருப்பூர் மேம்பாலத்தில் வந்த போது டூவீலரின் மட்கார்டு கழன்று சக்கரத்தில் சிக்கிக்கொண்டது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த டூவீலரில் சாலையில் கவிழ்ந்தது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு, சேலத்திலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெண்ணுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு  போலீசார் வழக்கு பதிவு ய செய்து விசாரித்தனர். இதில் அப்பெண் பச்சனம்பட்டி பக்கமுள்ள வேலகவுண்டனுரை சேர்ந்த சங்கீதா(45) என்பது தெரியவந்தது. கூலித்தொழிலாளியான இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கணவரை பிரிந்து வாழ்ந்து வரும், இவர் சேலத்திற்கு கூலிவேலைக்கு வருவார். பக்கத்துவீட்டை சேர்ந்தவர் மோகன். இவர் சேலத்திற்கு செல்வதாக கூறியதையடுத்து, அவரை டூவீலரில்  வந்துள்ளது தெரியவந்துள்ளது.  தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>