அம்பேத்கர் படம் அகற்றம் கண்டித்து ஆர்ப்பாட்டம்

சேலம், ஜன.19:  சேலம் ரயில் நிலைய வளாகத்தில்  வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் படம், கடந்த சில வாரங்களுக்கு  முன்பு அகற்றப்பட்டது. இதனை கண்டித்தும், மீண்டும் அதே இடத்தில் படத்தை வைக்க வலியுறுத்தியும், சுதந்திர மக்கள் கட்சி, அருந்ததியர் மக்கள் இயக்கம், இந்திய குடியரசு கட்சி, புரட்சி கர இளைஞர் முன்னணி, ஆதி தமிழர் பேரவை இணைந்து, சேலம் சூரமங்கலம் தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுதந்திர மக்கள் கட்சி நிறுவன தலைவர் முத்துசாமி தலைமை வகித்தார். ரயில் நிலைய வளாகத்தில் மீண்டும் அம்பேத்கர் படத்தை வைக்க வலியுறுத்தியும், அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில், அருந்ததியர் மக்கள் இயக்க பொது செயலாளர் பிரதாபன், இந்திய குடியரசு கட்சி மாநில செயல் தலைவர் கருமலை, புரட்சிகர இளைஞர் முன்னணி மாநகர செயலாளர் வின்சென்ட் மற்றும் பலர் கலந்து கொண்டனர். போலீசாரின் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  24 பெண்கள் உட்பட 65 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories:

>