×

பொங்கல் பண்டிகையையொட்டி நாட்டு மாடுகள் அணிவகுப்பு

நாமக்கல், ஜன.19: நாமக்கல்லை அடுத்த முத்துகாபட்டியில், பொங்கல் பண்டிகையையொட்டி, கொங்குதேச கலாச்சார வரலாற்று ஆய்வு மையம் சார்பில், பாரம்பரிய நாட்டுமாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோ-பூஜை மற்றும் நாட்டு மாடுகள் அணிவகுப்பு நடைபெற்றது. இதில், உலக நன்மைக்காக நடைபெற்ற கோ-பூஜையை சுகவனம் குருக்கள் தலைமை வகித்து நடத்தினார்.
முத்துகாபட்டி ஜமீன்தார் பிரசன்ன சிதம்பரம் முன்னிலை வகித்தார். இதில் 30க்கும் மேற்பட்ட மாடுகள் சிறப்பு அலங்காரத்துடன் மாலை அணிவிக்கப்பட்டு அணிவகுத்து நின்றது. பொதுமக்கள் மாடுகளுக்கு பழங்கள், பூக்கள், அகத்திக்கீரை போன்றவற்றை வழங்கி வழிபட்டனர். தொடர்ந்து முத்துக்காப்பட்டியில், முக்கிய வீதிகளின் வழியாக நாட்டுப்பசுக்கள் அணிவகுத்துச் சென்றன. இதில், நாமக்கல் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : occasion ,Country Cow Parade ,Pongal ,
× RELATED ராஜபாளையம் அருகே சேத்தூர் மாரியம்மன்...