ஓய்வூதியர்களுக்கு மலைவாழ் படி ஆர்டிஓவிடம் மனு

ஓசூர், ஜன.19: ஓசூர் பகுதியில் வசித்து வரும் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்டிஓ குணசேகரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி, அஞ்செட்டி வட்டங்களில் ஓய்வூதியர்களுக்கு, குளிர்காலத்தையொட்டி குளிர் கால படி, மலைவாழ் படியை வழங்க வேண்டும், ஓசூர் பகுதி வளர்ந்து வரும் தொழில் நகரம் என்பதால், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவும், ஓசூரை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. நிர்வாகிகள் சீனிவாசலு, ரவிசந்திரன், சரவணபவன், ராஜமந்திரி, கெம்பண்ணா, வெங்கடேஷ், பழனிசாமி, கலைவாணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>