×

அரசியல் கட்சியினருக்கு வேண்டுகோள் கட்டுமான பொருட்கள் விலை உயர்வை குறைக்க கோரி மனு

திருவாரூர், ஜன.19: கொரோனா தாக்கம் காரணமாக கட்டுமான தொழில் முடங்கியுள்ளதால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி வாடி வருகின்றனர். இந்நிலையில் கட்டுமான பொருட்களின் தேவை குறைந்து காணப்படும் இந்த நேரத்தில் கம்பி டன் ஒன்றுக்கு ரூ 20 ஆயிரம் மற்றும் சிமெண்ட் மூட்டை ஒன்றுக்கு ரூ.130 வரையிலும் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இதேபோல் மணல், ஜல்லி மற்றும் செங்கல் போன்ற பொருட்களின் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் பெரும் துன்பத்தை அனுபவிக்கும் நிலை ஏற்பட்டு வருவதால் கட்டுமான பொருட்களின் விலை உயர்வை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பின் திருவாரூர் மாவட்டம் சார்பில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் சேகர், பொருளாளர் செந்தில் அரசன் மற்றும் பொறுப்பாளர்கள் பிரபாகர், கோவிந்தராஜ் உட்பட பலர் கலெக்டரின் நேர்முக உதவியாளர் பொது (பொ) பூஷ்ஷணகுமாரிடம் மனு அளித்தனர்.

Tags : parties ,construction materials price hike ,
× RELATED தேர்தலுக்கு பிறகு பல கட்சிகள் காணாமல்...