திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் நாளை நெற்பயிர் நிவாரணம் கோரி 13 இடங்களில் சாலை மறியல் இந்திய கம்யூ. முடிவு

திருத்துறைப்பூண்டி, ஜன.19: திருத்துறைப்பூண்டி ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு கூட்டம் தங்கராசு தலைமையில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் பாலு எதிர்கால வேலை குறித்து பேசினர். கூட்டத்தில் நாகை எம்பி செல்வராஜ், மாநில கட்டுப்பாட்டு குழு தலைவர் வையாபுரி, முன்னாள் எம்எல்ஏ உலகநாதன், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சந்திரராமன், ஜோசப் ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.முப்பதாயிரம் நிவாரணமாக வழங்கிட கோரி திருத்துறைப்பூண்டி ஒன்றியம் முழுவதும் நாளை (20ம் தேதி) 13 இடங்களில் சாலை மறியல் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories:

>