தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா

தர்மபுரி, ஜன.19: தர்மபுரி மாவட்ட நிர்வாகம், வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில், 32வது தேசிய சாலை பாதுகாப்பு மாதம் நேற்று வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்தது. விழாவில் வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் வரவேற்று பேசினார். கலெக்டர் கார்த்திகா தலைமை வகித்து பேசினார். பின்னர் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு துண்டுபிரசுரத்தை கலெக்டர் வெளியிட, எஸ்பி பிரவேஷ்குமார் பெற்றுக்கொண்டார். இதையடுத்து கலெக்டர் கார்த்திகா தலைமையில் அனைவரும் போக்குவரத்து விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். விழாவில் மாவட்ட எஸ்பி பிரவேஷ்குமார், அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளர் ஜீவரத்னம், துணை மேலாளர்கள் மோகன்குமார், ஜெயபால், சுரேஷ்பாபு, கிளை மேலாளர் செல்வராஜ், சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெமினி, வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் முனுசாமி, மணிமாறன், சிவகுமார், ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கொண்டனர்.

Related Stories:

>