பதுக்கி வைத்து பெட்ரோல் விற்பனை: 2 பேர் மீது வழக்கு

உளுந்தூர்பேட்டை,  ஜன. 19:   உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் காவல்நிலைய சப்- இன்ஸ்பெக்டர்  பாலமுரளி மற்றும் போலீசார் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தீவிர  ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கிழக்குமருதூர் கிராமத்தில்  அனுமதியின்றி பதுக்கி வைத்து பெட்ரோல் விற்பனை செய்த செல்வராஜ்(55),  கிருஷ்ணவேணி(65) ஆகிய இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களிடம்  இருந்து 10 லிட்டர் பெட்ரோலை பறிமுதல் செய்தனர்.

Related Stories:

>