விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்

திண்டிவனம், ஜன. 19:    பொங்கல் பண்டிகை முடிந்து ஏராளமானோர் சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு ஒரே நேரத்தில் திரும்பியதால் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

 தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 14ம் தேதி முதல் அரசு விடுமுறை அறிவித்திருந்த நிலையில் பொங்கல் விழாவை கொண்டாட சென்னையிலிருந்து தென் மாவட்டங்களை சார்ந்தவர்கள் சொந்த ஊருக்கு கார் மற்றும் வாகனங்களில் சென்று நேற்று முன்தினம் முதல் அனைவரும் சென்னைக்கு திரும்பினர். மேலும் ஒரே நேரத்தில் வாகனங்கள் சென்னைக்கு அதிகளவில் செல்வதால் சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசல் காணப்படுகிறது. நேற்று மாலை முதல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் வாகனங்கள் அதிக நேரம் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.மேலும் கடந்த 2 நாட்களில் மட்டும் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு சுமார் ஒரு லட்சத்துக்கும் மேல் சென்றுள்ளனர். நேற்றும் அதிக அளவில் வாகனங்கள் தொடர்ந்து சென்று கொண்டிருந்ததால் மூன்று வழிகள் திறக்கப்பட்டு மொத்தம் ஒன்பது வழிகளில் வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>