மழையால் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கும் பணி துவக்கம்

தஞ்சை,ஜன.19: தஞ்சை மாவட்டத்தில் கடந்த 7 நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. இதனால் பொது மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும் தஞ்சை நகர் பகுதிகளில் உள்ள சாலைகள் அனைத்தும் ஜல்லிகள் பெயர்ந்து குண்டு குழியுமானது. இதே போல் பள்ளியக்கிரஹாரம், வண்டிகாரத்தெரு உள்ளிட்ட பல்வேறு பிரதான சாலைகளில், அதிகமான வாகன போக்குவரத்தால், பல்லாங்குழி போல் சாலை மாறியது. இதனால் பைக்கில் மற்றும் நடந்து செல்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இது குறித்து அப்பகுதியினர், நெடுஞ்சாலைத்துறைக்கு, சாலைகளில் உள்ள பள்ளங்களை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையை ஏற்று, நெடுஞ்சாலைத்துறையினர் குண்டு குழியுமான சாலைகளை பணியாளர்கள் மூலம் சீரமைக்கும் பணி நடைபெற்றது.

Related Stories:

>