×

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை மது விற்பனை ₹18.47 கோடி

விழுப்புரம், ஜன. 19: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 227 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. வழக்கமாக நாளொன்றுக்கு ரூ.4 கோடி வரை பீர், பிராந்தி பாட்டில்கள் விற்பனை ஆவது வழக்கம். தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற பண்டிகை நாட்களில் கூடுதலாக மது விற்பனை நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்தாண்டும் பொங்கல் பண்டிகைக்கு கூடுதலாக மது விற்பனை நடந்துள்ளது. பொங்கல் பண்டிகையான 14ஆம் தேதி 11, 996 அட்டைப் பெட்டிகள் பிராந்தியும், 6105 அட்டைப்பெட்டி பீர் பாட்டில்களும் ரூ. 8,95,96000 விற்பனையாகியுள்ளது. அதேபோல் காணும் பொங்கலன்று 11 ஆயிரத்து 75 அட்டைப் பெட்டிகள் பிராந்தியம், 11 ஆயிரத்து 782 அட்டைப்பெட்டி பீர் பாட்டில்களும் ரூ.9,51,59,910 விற்பனையாகியுள்ளது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு மொத்தம் ரூ.18,47,55,910க்கு விற்பனை நடந்துள்ளது. கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு 7188 அட்டைப் பெட்டிகள் பிராந்தியும், 4035 அட்டை பெட்டிகள் பீரும் ரூ.4,45,09965 விற்பனையாகியுள்ளது. காணும் பொங்கலன்று 11,773 அட்டைப்பெட்டிகள் பிராந்தியும், 7181 அட்டை பெட்டி பீர் பாட்டில்களும் ரூ.7,43,05, 945 விற்பனையாகியுள்ளது. மொத்தம் ரூ.11,88,15,910 கடந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு விற்பனையாகியுள்ளது. கடந்த ஆண்டைவிட தற்போது ரூ.6,59,40,000 அதிகமாக விற்பனையாகியுள்ளது.

Tags : Villupuram ,Kallakurichi ,
× RELATED கோயில் வரவு, செலவு கணக்கு கேட்டதால்...