×

தஞ்சை விவசாயி புதிய முயற்சி மழையால் சேதமடைந்த நெல்லுக்கு தஞ்சை பகுதிகளில்

தஞ்சை, ஜன.19: தொடர் மழையால் பாதிக்கப்பட்ட நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என திருவையாறு திமுக எம்எல்ஏ. துரை.சந்திரசேகரன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் மற்றும் திமுகவினர் மாவட்ட கலெக்டர் கோவிந்தராவிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் நிகழ்ந்த நிவர், புரவி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை முழுமையாக நிவாரணம் கிடைக்கவில்லை. அதுவும் ஒரு எக்டேருக்கு நெல்லுக்கு ரூ.20 ஆயிரம் அரசு அறிவித்தும் இன்னும் அதுகூட கிடைக்கவில்லை. தற்போது ஜனவரி மாதம் பெய்த மிக கடுமையான மழையால் மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் மற்றும் அனைத்து வித பயிர்களும் மழை நீரில் முழ்கி முளைத்துவிட்டன. இதனால் விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே வேளாண்துறை அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் மூலம் முழுமையாக கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீட்டு நிறுவனம் மூலம் பயிர் காப்பீடு தொகை முழுமையாக விரைவில் கிடைக்க ஆவணம் செய்ய வேண்டும். ஒரு ஏக்கர் நெல்லுக்கு ரூ.30 ஆயிரம், கடலைக்கு ரூ.40 ஆயிரம், வாழைக்கு ரூ.75 ஆயிரம், உளுந்துக்கு ரூ.25 ஆயிரம், எள்ளுக்கு ரூ.20 ஆயிரம், சோளத்திற்கு ரூ.25 ஆயிரம், மரவள்ளிக்கு ரூ.40 ஆயிரம், வெற்றிலை கொடிக்காலுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.

Tags : Tanjore ,areas ,
× RELATED தஞ்சை பசுபதீஸ்வரர் கோயிலுக்கு...