×

வல்லம் பேரூராட்சி பகுதியில் கால்நடை கழிவுகளால் சுகாதார சீர்கேடு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தஞ்சை, ஜன.19: வல்லம் பேரூராட்சி பகுதியில் கால்நடை கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். தஞ்சை அருகே வல்லம் பகுதியை சேர்ந்த குணசேகர், வெங்கடேசன், கார்த்திகேயன் தலைமையில் பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனுவில், வல்லம் பேரூராட்சிக்கு உட்பட்ட நடுத்தெரு, தேரோடும் வீதி, வெள்ளாளத் தெரு, வளையல்காரத்தெரு உள்ளிட்ட அனைத்து தெருக்களில் குப்பைகள் மற்றும் கால்நடை கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் இத்தெரு சாலையின் இருபுறமும் குப்பைகள் தேங்கி கிடப்பதால் வாகனங்கள் எளிதில் செல்ல முடிவதில்லை. மேலும் கால்நடைகளின் சாணம் கொட்டப்படுவதால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இதிலிருந்து கொசுக்கள் உற்பத்தியாவதால் மலேரியா, டெங்கு, யானைக்கால் நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு கடும் தொற்று நோய் பரவும் நிலை உருவாகியுள்ளது. எனவே இப்பகுதியில் கால்நடை குப்பைகளை கொட்ட பேரூராட்சி நிர்வாகம் தடை விதிக்க வேண்டும். மேலும் அங்கு தேங்கியுள்ள குப்பைகளை அகற்றி சுகாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags : area ,Vallam Municipality ,
× RELATED வாட்டி வதைக்கும்...