×

கலெக்டரிடம் திமுக எம்எல்ஏ மனு சாலையில் ஓடும் பாதாள சாக்கடை கழிவுநீர் எம்எல்ஏ தலைமையில் நடந்தது

தஞ்சை, ஜன.19: தஞ்சாவூரில் பல நாட்களாக சாலையில் ஓடும் பாதாள சாக்கடை கழிவுநீரை, கண்டுக்கொள்ளாத மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து எம்எல்ஏ நீலமேகம் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை முணியாண்டவர் காலனி, கல்லுகுளம் ஆகிய பகுதிகளில் பாதள சாக்கடை கழிவு நீர் சாலையில் வழிந்தோடி வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதை சீரமைக்க வலியுறுத்தி அப்பகுதியினர் மாநகராட்சி நிர்வாகத்துக்கு பல முறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதற்கிடையில் முணியாண்டவர் காலனி பகுதியில் நேற்று முன்தினம் இரவு பாதாள சாக்கடை கழிவு நீர் வழிந்தோடு இரு வீடுகளுக்குள் புகுந்ததால் பாதிக்கப்பட்டவர்கள் நேற்று காலை ஒன்று திரண்டனர். பின்னர் நாஞ்சிக்கோட்டை சாலையில் முணியாண்டவர் காலனி பேருந்து நிறுத்தம் அருகே தஞ்சாவூர் எம்எல்ஏ நீலமேகம் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்ததும் மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், டிஎஸ்பி பாரதிராஜன், தஞ்சாவூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் நாஞ்சிக்கோட்டை சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னர் எம்எல்ஏ நீலமேகம் நிருபர்களிடம் கூறியதாவது:
அரசியல் பாரபட்சத்தோடு தஞ்சாவூர் மாநகரை காழ்ப்புணர்வு கொண்டு அதிகாரிகள் பழிவாங்கி துாய்மை பணியை சரிவர செய்வதில்லை. பல இடங்களில் பாதாள சாக்கடைகள் அடைப்பு ஏற்பட்டு வருகிறது. இதை மாநகராட்சி அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு வந்தும் சீரமைக்கப்படுவதில்லை. இந்த நிலை தொடருமானால் விரைவில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்றார்.

Tags : MLA ,DMK ,Collector ,road ,
× RELATED பூந்தமல்லியில் திமுக கூட்டணி...