மீமிசல் அருகே பைக்குகள் மோதல் 2 பேர் பரிதாப சாவு

அறந்தாங்கி, ஜன.19: புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள முத்துக்குடாவை சேர்ந்த காளிமுத்து மகன் யோகேஸ்வரன்(27). இவர் நேற்று முத்துக்குடாவில் இருந்து மீமிசலுக்கு கிழக்கு கடற்கரை சாலையில் பைக்கில் வந்தார்.

அதேபோல் தீயத்தூரை சேர்ந்த சக்தி (55) என்பவரும், சிறுகடவாக்கோட்டையை சேர்ந்த நாகேந்திரன் (55) என்பவரும் எதிரே பைக்கில் வந்துள்ளனர். பைக்கை நாகேந்திரன் ஓட்டினார். சேமங்கோட்டை அருகே வந்தபோது, 2 பைக்குகளும் நேருக்கு நேர் மோதியது. இதில் படுகாயம் அடைந்த 3 பேரையும் மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சக்தி உயிரிழந்தார். யோகேஸ்வரன் மேல்சிகிச்சைக்காக மதுரை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மீமிசல் போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories:

>