×

விராலிமலை பகுதியில் பயிர் சேதம் குறித்து வேளாண் அதிகாரி ஆய்வு

விராலிமலை, ஜன.19: விராலிமலை பகுதியில் புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் பயிர் சேதம் குறித்து ஆய்வு நடத்தினார். தொடர் மழையின் காரணமாக விராலிமலை பகுதியில் பல்வேறு இடங்களில் நெற்பயிர்கள் மூழ்கி சேதமடைந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சிவக்குமார் நேற்று பயிர் சேதம் குறித்து ஆய்வு செய்தார். விராலிமலை வட்டாரம் நீர்பழனி, சூரியூர், பேராம்பூர் ஆகிய பகுதியில் ஆய்வு செய்த அவர், விவசாயிகளிடம் சிட்டா, அடங்கல், ஆதார், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், சேதமடைந்த வயலில் நின்று எடுத்த போட்டோ ஆகியவற்றை சமர்பிக்க கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வின்போது விராலிமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ராமு, வேளாண்மை அலுவலர் ஷாலினி ஆகியோர் உடன் சென்றனர்.

Tags : Agriculture Officer ,area ,Viralimalai ,
× RELATED விவசாயிகள், விதை விற்பனையாளர்கள் விதை பரிசோதனை செய்து கொள்ள அழைப்பு