×

மு.க.ஸ்டாலின் வருகையால் விராலிமலை விழாக்கோலம்

விராலிமலை, ஜன.19: விராலிமலைக்கு இன்று மதியம் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வருகையொட்டி விராலிமலை விழாக்கோலம் பூண்டுள்ளது. விராலிமலையில் இன்று மதியம், திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொள்ளும் மக்கள் கிராம சபை நடைபெறுகிறது. விராலிமலை - மணப்பாறை சாலையில் பிடிகே வளாகத்தில் இதற்காக கடந்த ஒரு வாரமாக உள்கட்டமைப்பு பணிகள் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக அலங்கார வளைவு விராலிமலை - மணப்பாறை சாலையில் அமைக்கப்பட்டுள்ளது. விராலிமலை காமராஜர் நகரில் இருந்து கூட்டம் நடைபெறும் இடம் வரை சாலை ஓரங்களில் கட்சி கொடிகள் கட்டப்பட்டுள்ளது. வெளியூர் வாகனங்கள் வர தனியாக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. வளாகம் முழுவதும் கட்சி கொடிகள், தோரணங்கள் கட்டப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை வரவேற்க கட்சியினர் எழுச்சியுடன் பணிகள் செய்து வருகின்றனர். இதனால் விராலிமலை விழாக்கோலம் பூண்டுள்ளது.

Tags : festival ,Viralimalai ,arrival ,MK Stalin ,
× RELATED நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்… புகைப்படத் தொகுப்பு!