பூந்தமல்லி மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா

திருவள்ளூர்: பூந்தமல்லி மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 104 ம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கல்வெட்டு திறப்பு விழா மற்றும் கொடியேற்று விழா நசரத்பேட்டையில் நடைபெற்றது.  விழாவிற்கு ஒன்றிய செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான என்எஸ்ஏ.இரா. மணிமாறன் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் தி.ப.கண்ணன்,  பொருளாளர் சி.ஒய்.ஜாவித் அகமத், நகர செயலாளர்கள் பூவை கே.எஸ்.ரவிச்சந்திரன்,  டி.எம்.ரமேஷ், பொதுக்குழு உறுப்பினர் கே.ராஜகோபால்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  ஒன்றிய நிர்வாகிகள் எல்.ஏழுமலை, நர்மதா  உள்ளிட்ட பலர் வரவேற்றனர். விழாவில் மத்திய மாவட்ட செயலாளரும், ஊரகத் தொழில் துறை அமைச்சருமான பா.பென்ஜமின் கல்வெட்டை திறந்து வைத்து, கொடியேற்றி உரையாற்றினார். இதில் ஒன்றிய செயலாளர்கள் செவ்வை எம்.சம்பத்குமார், புட்லூர் ஆர்.சந்திரசேகர், எம்.மகேந்திரன் மற்றும் ஜி.உமாசந்திரன் எல்.சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>