ஆவுண்டீஸ்வரர் கோயிலில் தெலங்கானா ஆளுநர் சுவாமி தரிசனம்

திருவள்ளூர்: பூந்தமல்லி அடுத்த நேமம் கிராமத்தில் உள்ள  அமிர்தாம்பிகை அம்பாள் உடனுறை ஆவுண்டீஸ்வரர் கோயிலில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். அவரை ஓபிசி அணி மாநில தலைவர் ஜெ.லோகநாதன், திருவள்ளூர் மாவட்ட பாஜக தலைவர் ஏ.ராஜ்குமார், மாவட்ட நிர்வாகிகள் அஸ்வின் என்கிற ராஜசிம்ம மகேந்திரவர்மன், இரா.கருணாகரன், மதுசூதனன், ஜெயக்குமார் ஆகியோர் வரவேற்றனர்.  தெலுங்கானா ஆளுநர் வருகையையொட்டி  மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ப.அரவிந்தன் உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முத்துக்குமார் மேற்பார்வையில் துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories:

>