×

முதல்வரின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்: ஐஜி தலைமையில் போலீசார் ஆய்வு

செங்கல்பட்டு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதனால், அப்பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, சென்னை வடக்கு மண்டல ஐஜி நாகராஜ் உள்பட உயரதிகாரிகள் ஆய்வு செய்தனர். தமிழகத்தில் 2021 சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை முதலில் 2 நாட்கள் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில், தீவிர தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். இதையொட்டி  ஸ்ரீபெரும்புதூரில் தொடங்கி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சிங்கபெருமாள்கோயில் திருப்போரூர், புதுப்பட்டினம், செய்யூர், மதுராந்தகம், பல்லாவரம், தாம்பரம் ஆகிய பகுதிகளில் பிரசாரம் மற்றும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேசுகிறார்.

முதல்வரின் வருகையை முன்னிட்டு, மேற்கண்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை வடக்கு மண்டல ஐஜி நாகராஜ், காஞ்சிபுரம் டிஐஜி சாமுண்டீஸ்வரி, எஸ்பிக்கள் காஞ்சிபுரம் ஷண்முகப்ரியா, செங்கல்பட்டு  கண்ணன் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து அவர்கள், செங்கல்பட்டு புதிய மற்றும் பழைய பஸ் நிலையம், ராட்டின கிணறு உள்பட பல பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

Tags : visit ,police inspection ,IG ,
× RELATED வீடுகளில் தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை, அதிரடி சோதனை