×

நெற்குன்றம் பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டிடம் அகற்றம்

சென்னை, டிச.13: நெற்குன்றம், பெருமாள் கோயில் தெருவில் சுமார் 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு கட்டிடத்தை, உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
வளசரவாக்கம் மண்டலம், 145வது வார்டு, நெற்குன்றம் பெருமாள் கோயில் தெருவில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் இடத்தில், சுமார் 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 2 தளங்களுடன் கட்டிடம் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆக்கிரமிப்பு கட்டிடத்தை அகற்ற உத்தரவிட்டது. அதன்பேரில், மாநகராட்சி அலுவலர்களால், காவல் துறை, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், தமிழ்நாடு மின்சார வாரியத்தை சார்ந்த அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து நேற்று பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.

Tags : Nelkundram ,Chennai ,Perumal Koil Street, Nelkundram ,Valasaravakkam Zone, ,145th Ward, ,Nelkundram Perumal Koil Street ,
× RELATED கனமழை காரணமாக சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.13.35 கோடி ஒதுக்கீடு