- ஜூனியர் மகளிர் உலக ஹாக்கி
- இந்தியா
- ஸ்பெயின்
- சாண்டியாகோ
- பெண்கள்
- FIH ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை
- சாண்டியாகோ, சிலி...
சான்டியாகோ: எப்ஐஎச் ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் ஸ்பெயின் அணியிடம் இந்திய மகளிர் அணி 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது. சிலி நாட்டின் சான்டியாகோ நகரில் எப்ஐஎச் ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் நடந்து வருகின்றன. போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 9 மற்றும் 10ம் இடங்களுக்கான போட்டி சான்டியாகோ நகரில் நேற்று நடந்தது. அப்போட்டியில் இந்திய மகளிர், ஸ்பெயின் மகளிருடன் மோதினர். போட்டியின் 16வது நிமிடத்தில் ஸ்பெயின் வீராங்கனை நடாலியா வினானோவா முதல் கோல் போட்டார்.
அவரைத் தொடர்ந்து, ஸ்பெயின் அணியின் எஸ்தர் கேனலஸ், அணியின் 2வது கோலை 36வது நிமிடத்தில் போட்டு அணியை அசைக்க முடியாத நிலைக்கு உயர்த்தினார். சிறிது நேரத்தில் இந்திய வீராங்கனை கனிகா சிவாச், நம் அணிக்காக முதல் கோல் போட்டு கணக்கை துவக்கி வைத்தார். இருப்பினும், அதன் பின் இரு அணியினராலும் கோல் எதுவும் போட முடியவில்லை. அதனால், 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பயெின் அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியை அடுத்து ஸ்பெயின் உலகக் கோப்பை தொடரில் 9ம் இடத்தை பிடித்தது. இந்தியாவுக்கு 10ம் இடம் கிடைத்தது.
