அய்யாக்கண்ணு குற்றச்சாட்டு அய்யனார் கோயில் பூட்டை உடைத்து உண்டியல் பணம், கோயில் மணி திருட்டு

ஜெயங்கொண்டம், ஜன.19: அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வெள்ளபிள்ளையார் தெருவில் மிகவும் பழமைவாய்ந்த அய்யனார் கோயிலில் விநாயகர், முருகன் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் உள்ளது. இந்நிலையில் கடந்த 16ம் தேதி இரவு பூசாரி சின்னதம்பி கோயில் விளக்கேற்றிவிட்டு சென்றுள்ளார். பின்னர் நேற்று முன்தினம் காலை பூசாரி சின்னதம்பி கோயில் பூட்டை திறக்க முயன்றபோது பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் ஊர் முக்கியஸ்தர்களுடன் கோயில் உள்ளே சென்று பார்த்தபோது 66 கிலோ எடை கொண்ட கோயில் மணி, 3 குத்துவிளக்கு, உண்டியல் உள்ளிட்ட ரூ. 50 ஆயிரம் மதிப்பு பொருட்கள் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து உடையார்பாளையம் போலீசாரிடம் கோயில் அலுவலர் சம்பத் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகிறார்.

Related Stories: