×

வேதாரண்யத்தில்


வேதாரண்யம், ஜன.19: வேதாரண்யத்தில் பருவம் தவறிப்பெய்த கனமழையால் அறுவடை செய்ய வேண்டிய நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழிந்துவிட்டன. அனைத்து செலவுகளையும் முடித்து பலனை எதிர்பார்த்திருந்த விவசாயிகளை நிவர், புரவி புயல்களை தொடர்ந்து பருவம் தவறிப்பெய்த கனமழையால் சம்பா சாகுபடிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டு விட்டன. கடலை, புகையிலை போன்ற சாகுபடிகளும் அழிந்தன. விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி விட்டது. இந்த நிலையில் தமிழக அரசு பருவம் தவறிப்பெய்த கனமழையால் பாதிப்படைந்த அனைத்து விவசாயிகளுக்கும் உரிய இழப்பீடும், நிவாரணமும் வழங்கக்கோரி வேதாரணியம் தாலுக்கா தாணிக்கோட்டகத்தில் ஒன்றியச் செயலாளர் அம்பிகாபதி தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சேர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Tags : Vedaranyam ,
× RELATED வேதாரண்யம் அருகே குடிதண்ணீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் மறியல்