×

சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி ஹெல்மெட் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பேரணி

நாகை, ஜன.19: சாலை பாதுகாப்பு விழாவை முன்னிட்டு நாகை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நேற்று நடந்தது. 32ம் ஆண்டு சாலை பாதுகாப்பு மாத விழா நேற்று தொடங்கி பிப்ரவரி மாதம் 17ம் தேதி வரை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு நாகை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் மற்றும் சீட்பெல்ட் அணிவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நடந்தது. வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜ் தலைமை வகித்தார். மோட்டார் வாகன ஆய்வாளர் தனபாலன் சாலை பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகளில் வழங்கினார். இதில் தலைகவசம் உயிர் கவசம், தலை கவசம் அணிந்து உயிரிழப்பை தவிர்க்க வேண்டும். போதையில் பயணம் மரணத்தை ஏற்படுத்தும், குறுகிய பாலம் மற்றும் சாலை வளைவுகளில் வாகனத்தை முந்தி செல்லக்கூடாது என்பது உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்யப்பட்டது.

Tags : Awareness rally ,occasion ,
× RELATED திருவாடானையில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி